முறைகேட்டில் ஈடுபட்டால் அரிசி ஆலை உரிமம் ரத்து
ரேஷன் அரிசி முறைகேட்டில் ஈடுபட்டால் அரிசி ஆலை உரிமம் ரத்து செய்யப்படும் என்று ராமநாதபுரத்தில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா எச்சரித்துள்ளார்.
ரேஷன் அரிசி முறைகேட்டில் ஈடுபட்டால் அரிசி ஆலை உரிமம் ரத்து செய்யப்படும் என்று ராமநாதபுரத்தில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா எச்சரித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் அதிகாரிகள், குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஜோதிபாசு, கூட்டுறவு இணை பதிவாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா பேசியதாவது:-
உரிமம் ரத்து
விவசாயிகள் அல்லாத இடைத்தரகர்களிடம் நெல் கொள்முதல் செய்யக்கூடாது. நெல் கொள்முதல் நிலையத்தில் அதிக இருப்பு வைக்கக்கூடாது. முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். லோடுமேன்கள், ஒப்பந்ததாரர்கள் விவசாயிகளிடம் நேரடியாக கூலி அதிகம் கேட்டு தகராறு செய்யக்கூடாது.
நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள பதிவேடுகள் தவறாமல் பராமரிக்கப்பட வேண்டும். தேவையற்ற நபர்களை கொள்முதல் நிலையத்தில் அனுமதிக்ககூடாது.
ரேஷன் அரிசி முறைகேட்டில் ஈடுபடும் அரிசி ஆலை உரிமம் ரத்து செய்யப்படும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட விற்பனையாளரை தவிர பிற நபர்கள் ரேஷன் பொருட்கள் வழங்க கூடாது. எடை சரியாக வழங்க வேண்டும். ரேஷன் கடையில் ஊழியர்கள் பொது வினியோகத்திட்ட அரிசிகளை கள்ளசந்தையில் விற்கும் முறைகேட்டில் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.