அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரூ.46 கோடி நிலம் பதிவு ரத்து- நயினார் பாலாஜி குற்றச்சாட்டு


அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரூ.46 கோடி நிலம் பதிவு ரத்து- நயினார் பாலாஜி குற்றச்சாட்டு
x

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரூ.46 கோடி நிலம் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக நயினார் பாலாஜி குற்றம் சாட்டினார்.

திருநெல்வேலி

நெல்லையில் பாரதீய ஜனதா கட்சி இளைஞர் அணி துணைத் தலைவரும், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வின் மகனுமான நயினார் பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை விரும்கம்பாக்கத்தில் உள்ள நிலத்துக்கு, ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கிரைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அறிகிறேன். இந்த உத்தரவு தவறானது ஆகும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நிலம் குறித்த ஆவணங்கள் சரியாக இருப்பதாக விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகம் சார்பில், ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு தடையில்லா சான்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசு வக்கீலிடம் சட்ட கருத்து பெறப்பட்டு உள்ளது. விருகம்பாக்கம் நிலத்தின் மதிப்பு ரூ.46 கோடி, ஆனால் அதனை ரூ.100 கோடி என்று கூறி உள்ளனர்.

அனைத்து ஆவணங்களின்படி மட்டுமே கிரைய ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதில் விதிமீறல் இல்லை. இதனை நீதிமன்றம் மூலம் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story