கோவையை சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல்


கோவையை சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல்
x

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோவையை சேர்ந்தவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோயம்புத்தூர்

நாட்டின் துணை ஜனாதிபதியாக வெங்கையாநாயுடு உள்ளார். இவருடைய பதவிக்காலம் வருகிற 10-ந் தேதியுடன் முடிவடை கிறது. இதையொட்டி துணை ஜனாதிபதி தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த 39 தேர்தல்க ளில் போட்டியிட்ட தேர்தல் மன்னனான நூர்முகமது (வயது 64) என்பவர் நேற்று டெல்லி நாடாளுமன்றத்துக்கு சென்றார்.

அவர், துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியான உட்பல்குமார் சிங்கை சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இது குறித்து நூர்முகமது கூறும்போது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தேன். அதை வழிமொழிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது.

தற்போது துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து உள்ளேன். தேர்தலில் வாக்களிப்பது பொதுமக்களின் ஜனநாயக கடமை. அதை பலர் செய்வது இல்லை. அதை வலியுறுத்தவே நான் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து உள்ளேன் என்றார்.

இவர், தற்போது 40-வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story