தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வுகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரையிலும், 2-ம் ஆண்டு தேர்வுகள் வருகிற 5-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது. இத்தேர்விற்கு விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) அனைவரும் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story