கஞ்சா விற்றவர், 282 நாட்கள் சிறையில் அடைப்பு
கஞ்சா விற்றவர், 282 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை இளைஞர்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்த தாக்கர் (வயது 69) என்பவரை போலீசார் பிடித்து நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஒரு வருட காலத்துக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன், கஞ்சா விற்கும் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை அவர் தாக்கல் செய்தார். ஆனால் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி அவர் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சாவை தொடர்ந்து விற்பனை செய்துள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மீண்டும் நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ஏற்கனவே தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தின்படி குற்ற செயல்கள் புரியாமல் இருந்த காலத்தை தவிர, மீதியுள்ள 282 நாட்களை அவர் சிறையில் கழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தாக்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.