கஞ்சா கடத்தல் வழக்கு; 60 வயது மூதாட்டிக்கு 10 ஆண்டு சிறை - ஐகோர்ட் தீர்ப்பு


கஞ்சா கடத்தல் வழக்கு; 60 வயது மூதாட்டிக்கு 10 ஆண்டு சிறை - ஐகோர்ட் தீர்ப்பு
x

கஞ்சா கடத்தல் வழக்கில் 60 வயது மூதாட்டி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 150 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு தொடர்பாக பாக்கியம், திருமுருகன், பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், இந்த வழக்கில் கைதான 60 வயது மூதாட்டி பாக்கியத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்தனர். மேலும் திருமுருகன், பாலமுருகன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

1 More update

Next Story