கன்டோன்மெண்ட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கன்டோன்மெண்ட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 July 2023 2:15 AM IST (Updated: 14 July 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

கன்டோன்மெண்ட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி

குன்னூர்

மத்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள 21 கன்டோன்மெண்ட் போர்டுகளை, அருகில் உள்ள மாநில அரசின் நகராட்சிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இது கன்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கன்டோன்மெண்ட் தொழிலாளர் சங்கம் சார்பில் வெலிங்டன் கன்டோன்மெண்ட் அலுவலகம் முன்பு மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை சங்க தலைவர் வினோத் தலைமை தாங்கினார். உதவி தலைவர் விவேக், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கன்டோன்மெண்டுகளை நகராட்சிகளுடன் இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story