கிணத்துக்கடவு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்;விவசாயி பலி


கிணத்துக்கடவு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்;விவசாயி பலி
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 2:58 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

கிணத்துக்கடவுஅருகே உள்ள தேவராயபுரம், நல்லிக்கவுடண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் வயது (51). விவசாயி. இவரது மனைவி செல்வநாயகம் (45). இவர்கள் தற்போது கிணத்துக்கடவு பொன்மலை நகரில் வசித்து வந்தனர். நேற்று கிணத்துக்கடவில் இருந்து சொந்த ஊரான நல்லிகவுண்டன்பாளையத்திற்க்கு மோட்டார்சைக்கிளில் நடராஜ், தனது மனைவியுடன் சென்றார்.

கோவை-பொள்ளாச்சி மெயின்ரோட்டில் சென்றபோது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

சாவு

இந்த விபத்தில் 2 ேபரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடராஜை பரிசோதனை செய்த போது அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. செல்வநாயககிக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் விபத்தை ஏற்படுத்தியதாக மதுரையைச் சேர்ந்த கிஷோர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story