கார் மோதி விபத்து: காங்.மாவட்ட தலைவர் பலி


கார் மோதி விபத்து: காங்.மாவட்ட தலைவர் பலி
x
தினத்தந்தி 26 Sept 2023 11:53 AM IST (Updated: 26 Sept 2023 11:54 AM IST)
t-max-icont-min-icon

சாலையோர கடையில் சாப்பிடும் போது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அளாவூர் நாகராஜ் உயிரிழந்தார்.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவரும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலருமான அளாவூர் நாகராஜ்(57) என்பவர் கார் விபத்தில் உயிரிழந்தார்.

சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் சாலையோர தள்ளுவண்டி டிபன் கடையில் நேற்று இரவு நண்பர்களுடன் நாகராஜ் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அதே கடையில் சாப்பிட்ட வேறொரு நபர் காரை இயக்கியபோது இந்த விபத்து ஏற்பட்டது. கார் மோதியதில் நாகராஜ் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story