மரத்தில் கார் மோதல்; 17 வயது சிறுமி பலி


மரத்தில் கார் மோதல்; 17 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மரத்தில் கார் மோதி 17 வயது சிறுமி பலியானாா்.

விழுப்புரம்

மேல்மலையனூர்:

திருவண்ணாமலை மாவட்டம் சோமசிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முபாரக் (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி ஷாகிதாபானு(50). இந்த தம்பதியின் மகன் ஷேக் ஹாருண்(20), மகள் ஷாயின் (17). இவர்கள் 4 பேரும் நேற்று காலை ஒரு காரில் திருவண்ணாமலையில் இருந்து சேத்துப்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டனர். காரை ஷேக் ஹாருண் ஓட்டிச்சென்றார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே எய்யில் கூட்டு சாலையில் வந்தபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் ஷேக் ஹாருணின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 4 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷாயின் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story