கார் மோதி வடமாநில தொழிலாளி பலி
கார் மோதி வடமாநில தொழிலாளி பலி
கிணத்துக்கடவு
ஒடிசா மாநிலம் சோனாப்பூர் பகுதியை சேர்ந்தவர் அகஸ்திதேலா(வயது 43). கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கியிருந்து, எந்திர பிரிவில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அகஸ்திதேலா நேற்று இரவு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கோவில்பாளையம் நோக்கி கோவை-பொள்ளாச்சி சாலையோரத்தில் நடந்து சென்றார். அப்போது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென அகஸ்திதேலா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், காரை ஓட்டி வந்த வீரகேரளத்தை சேர்ந்த முகமது ரபிக் என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.