திருச்சி பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் கார் மோதி விபத்து - 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

திருச்சி பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் கார் மோதி விபத்து - 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு
x

திருச்சியில் பேருந்து நிலையம் அருகே கார் மோதி மின் கம்பம் சரிந்ததில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சியில் பேருந்து நிலையம் அருகே கார் மோதி மின் கம்பம் சரிந்ததில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி சாலையில் கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அளவுக்கு அதிகமான மது போதையில் சொகுசு கார் ஒன்றை ஓட்டி வந்துள்ளார். அப்போது காரானது அவருடைய கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த அடுத்தடுத்த மின்கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் உயர் மின்னழுத்த கம்பங்கள் சாய்ந்து அந்த பகுதி முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரமான துண்டிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் மது போதையில் இருந்த நபரை விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் பெங்களூருக்கு செல்வதற்காக காரை இயக்கி வந்ததும் தெரிய வந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் இந்த விபத்தில் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story