கார் டிரைவர் கைது


கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:47 PM GMT)

ஆத்தூர் அருகே கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து, கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே உள்ள சுகந்தலை கிராம பஞ்சாயத்து பகுதியான வடக்கு மரந்தலையை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் செல்வராஜ் (வயது 48). இவர் குடும்பத்துடன் வடக்கு மரந்தலையில் வசித்து வருகிறார். சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் நடத்தி வருகிறார். அவர் சவாரிக்காக தனது ஆட்டோவை ஓட்டிக்கொண்டு கீரனூருக்கு சென்றார். கீரனூர் அருகே சென்றபோது திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் ஒன்று செல்வராஜின் ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இதில் செல்வராஜ் பலத்த காயமடைந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் விசாரணை நடத்தி, காரை ஓட்டி வந்த நெல்லை கிருஷ்ணா நகர் ஆதிபராசக்தி நகரை சேர்ந்த செல்லப்பா மகன் சுடலைமணி (வயது 28) என்பவரை கைது செய்தார்.


Next Story