வாடிப்பட்டி அருகே கார் டிரைவரிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் சிக்கினர்


வாடிப்பட்டி அருகே கார் டிரைவரிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் சிக்கினர்
x

வாடிப்பட்டி அருகே கார் டிரைவரிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் சிக்கினர்.

மதுரை

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே கார் டிரைவரிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் சிக்கினர்.

வழிப்பறி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 28). இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கார் டிரைவராக உள்ளார்.. இவர் கடந்த 4-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் நிலக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தனிச்சியம் பிரிவு அருகே வந்த போது மிக சோர்வாக இருந்ததால் அங்குள்ள பஸ் நிறுத்த நிழற்குடையின் ஓரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிமெண்டு இருக்கையில் படுத்து தூங்கிவிட்டார். அப்போது நள்ளிரவு 2 மணிக்கு 2 பேர் தூங்கியவரை எழுப்பி கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் என்ன வைத்திருக்கிறாய் என்று கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் சட்டை பையில் வைத்திருந்த ரூ.2,100 பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட நாகராஜன் அந்த மர்ம நபர்களை பின்தொடர்ந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர்கள் கட்டக்குளம் பிரிவில் உள்ள பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தி பெட்ரோல் போட்டனர்.

2 பேர் கைது

பின்னால் சென்ற நாகராஜன் தன்னிடம் வேறு பணம் இல்லை என்றும் தனக்கு 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு சம்மதித்த மர்ம நபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.200-க்கு பெட்ரோல் போட கூறி பணம் கொடுத்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், முருகேசன் மற்றும் போலீசார் செம்புகுடிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களை பிடித்து விசாரித்த போது புதுப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்ற ஆப்பிள்(22), குட்டிமேய்கிபட்டியைச் சேர்ந்த புகழேந்தி (23) என்று தெரியவந்தது.

மேலும் விசாரணையில் தனிச்சியம் பிரிவில் கார் டிரைவர் நாகராஜன் என்பவரிடம் அவர்கள் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ், புகழேந்தி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Next Story