கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; காண்டிராக்டர் படுகாயம்
தெற்கு விஜயநாராயணம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதலில் காண்டிராக்டர் படுகாயம் அடைந்தார்.
திருநெல்வேலி
இட்டமொழி:
பரப்பாடியைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் மகன் விக்னேஷ் (வயது 32). இவர் தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளத்தில் காண்டிராக்டராக உள்ளார். நேற்று காலை அங்கிருந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விக்னேஷ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் 2 கால், ஒரு கை முறிந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் காரை ஓட்டி வந்த நெல்லை டவுனை சேர்ந்த சண்முகராஜ் மகன் திருச்செல்வன் (24) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story