கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; கொத்தனார் சாவு
கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கொத்தனார் இறந்தார்
சிவகங்கை
காரைக்குடி
கல்லல் அருகே உள்ள செவரக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 22). கொத்தனார். இவரது தாய், தந்தை சிறுவயதிலேயே இறந்த நிலையில் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். சம்பவத்தன்று தேவகோட்டையில் இருந்து கோவிலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேவகோட்டை ரஸ்தா பாலம் அருகே வந்த போது திருச்சியில் இருந்து வந்த கார் பாண்டியராஜன் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோமநாதபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story