கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் சாவு


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் சாவு
x

துறையூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி

துறையூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்

கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழில் சங்க அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை சந்திப்பதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

காரில் அரவக்குறிச்சி தொழிற்சங்க செயலாளர் சுரேந்தர், பொருளாளர் சதீஷ், மாவட்ட துணை செயலாளர் கதிரேசன், கரூர் ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, ஆகாஷ் ஆகியோர் இருந்தனர். காரை மூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார். கார் துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானா அருகே தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மின் கம்பங்களில் மோதி நின்றது. இந்த விபத்தில் மேல குன்னுப்பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 52), கார்த்தி, துறையூரை சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் காரில் வந்தவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சாவு

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கணேசன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மற்ற 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story