கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு


கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் கார்- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த ஜெயரால்ட் மகன் செல்வின் (வயது 38). இவர் கல்லாமொழியில் உள்ள தனியார் துறைமுகத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று உவரியில் இருந்து கல்லாமொழிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குலசேகரன்பட்டினம் பைபாஸ் சாலை காவடிபிறை தெரு விலக்கு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வின் தூக்கி வீசப்படடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த மதுரை பாஸ்கரதாஸ் நகரை சேர்ந்த குமரேசன் மகன் சுப்பிரமணியசாமி (32) என்பவர் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story