ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்களின் கார், 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!


ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்களின் கார், 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!
x

கோத்தகிரி அருகே 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோத்தகிரி:

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் நேற்று காலை, தனது சொகுசு காரில் கோவை கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்கள் 4 பேருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்குள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளித்து விட்டு இரவில் கோவைக்கு செல்வதற்காக கோத்தகிரி வழியாகச் சென்றுள்ளார். காரை அவரே ஓட்டியுள்ளார். இரவு 12 மணியளவில் கார் தட்டபள்ளம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, ஒரு குறுகிய வளைவில் காரைத் திருப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபதிற்குள்ளானது.

இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 5 பேரும் காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story