ஓமலூர் அருகேசரக்கு வேன் சாலையில் கவிழ்ந்ததுரோட்டில் கொட்டிய தக்காளியை பொதுமக்கள் அள்ளி சென்றனர்


ஓமலூர் அருகேசரக்கு வேன் சாலையில் கவிழ்ந்ததுரோட்டில் கொட்டிய தக்காளியை பொதுமக்கள் அள்ளி சென்றனர்
x

ஓமலூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து சாலையில் கொட்டிய தக்காளியை பொதுமக்கள் அள்ளி சென்றனர்.

சேலம்

ஓமலூர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பிளாஸ்டிக் பெட்டிகளில் சுமார் 3 டன்னுக்கும் மேல் தக்காளியை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சேலத்தை நோக்கி வந்தது. அந்த சரக்கு வேன் ஓமலூர் காமலாபுரம் பிரிவு ரோடு அருகே தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை வந்த போது எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் இருந்த சுமார் 3 டன் தக்காளியும் ரோட்டில் கொட்டி சிதறியது. இதைபார்த்த அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் ரோட்டில் சென்றவர்கள் பைகளிலும், கூடைகளிலும் சாக்குகளிலும் தக்காளிகளை அள்ளிச்சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story