சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; 5 பெண்கள் படுகாயம்


சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; 5 பெண்கள் படுகாயம்
x

சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; 5 பெண்கள் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் அருகே பனையவயல் கிராமம் மாத்தூர் ராமசாமிபுரம் பகுதியில் இருந்து 16 தொழிலாளர்கள் சரக்கு வேனில் பெருநாவலூர் கிராமத்திற்கு விவசாய பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். சரக்கு வேனை பழனியப்பன் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு சரக்கு வேன், பழனியப்பன் ஓட்டி வந்த சரக்கு வேன் பின்னால் ேமாதியது. இதில் சரக்கு வேன் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சிந்தாமணி (வயது 60), வசந்தா (50), அஞ்சம்மாள் (55), பார்வதி (40), பூங்கொடி (37) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story