மீன்களை ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - பெண் உயிரிழப்பு...!


மீன்களை ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - பெண் உயிரிழப்பு...!
x

நாகை அருகே மீன்களை ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி தளத்திலிருந்து மீனவ பெண்கள் 8 பேர் இன்று காலை மீன்களை வாங்கி கொண்டு திருவாரூரில் சென்று விற்பதற்காக சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர் .

சரக்கு வேனை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த கரிகாலன்(வயது 46) என்பவர் ஓட்டி வந்தார். கீழ்வேளூர் அருகே வரும் போது வாகனத்தின் கியர் பாக்ஸின் கம்பி உடைந்ததில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த அக்கரைப்பேட்டையை சேர்ந்த பூர்ணசந்திரன் என்பவரின் மனைவி கல்பனா (40) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

சரக்கு வேனில் பயணம் செய்த சத்யா (44), ஆரியமாலா (60 ),மீனாட்சி (35), பொன்னாச்சி (65), தையல்நாயகி (55), பட்டம்மாள்(60) ஆகியோர் பலத்த காயம் அடந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார் கல்பனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .



Next Story