கிணற்றில் தவறி விழுந்த தச்சுதொழிலாளி சாவு


கிணற்றில் தவறி விழுந்த தச்சுதொழிலாளி சாவு
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தச்சுதொழிலாளி சாவு

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் தினேஷ்(வயது 32). தச்சு தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்டநேரமாகியும் திரும்பி வரவில்லை. பின்னர் மறுநாள் உறவினா்கள் அவரை தேடியபோது அருகே அய்யப்பன் நகரில் அண்ணாமலை என்பவரின் கிணற்றின் கரையில் தினேசின் மோட்டார் சைக்கிள் மற்றும் காலணி கிடந்ததை பார்த்தனர். இதனால் அவர் தவறி உள்ளே விழுந்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருக்கோவிலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கி பலியான தினேசின் உடலை மீட்டனர். தகவல் அறிந்து வந்த மணலூர்பேட்டை போலீசார் அவரது உலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் தினேஷ் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story