கார்கள் மோதல்; 10 பேர் படுகாயம்


கார்கள் மோதல்; 10 பேர் படுகாயம்
x

கார்கள் மோதலில் 10 பேர் படுகாயம் அநை்தனர்.

திருச்சி

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரபாபு (வயது 30) இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். காரை சுரேந்திர பாபு ஓட்டினார். காரில் திருமலை, இந்துமதி, இவர்களது மகள் மகிரா மற்றும் சுகுனா என 4 பேர் அமர்ந்திருந்தனர். மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தி என்ற இடத்தில் நேற்று காலை கார் வந்து கொண்டிருந்த போது, அதே சமயத்தில் நாமக்கல் மாவட்டம் மூலக்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (32) என்பவர் தனது மனைவி வைஷ்ணவி, மகன்கள் ஹர்திக், ஹன்சிக் மற்றும் உறவினர் சரண்யா, மகள் இஷாஸ்ரீ உள்ளிட்ட 6 பேர் திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். சிலையாத்தி என்ற இடத்தில் வந்தபோது, 2 கார்களும் நேருக்கு, நேர் மோதிக்கெண்டன. இந்த விபத்தில் இரு கார்களிலும் சென்ற குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story