இருமத்தூரில்சாலை மறியலில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்கு
தர்மபுரி
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே இருமத்தூர் ஊராட்சி டொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மயான பிரச்சினை குறித்து இருமத்தூரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் கம்பைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோக பிரகாஷ் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து முன்அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட டொக்கம்பட்டியை சேர்ந்த வேடியப்பண் என்கிற காந்தி (வயது 40), சீனிவாசன் (42), வெங்கடேசன் (42), ஞானபிரகாசம் (42), மயில்வாகனம் (45), பழனிசாமி (45) உள்பட மொத்தம் 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story