சேலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபா.ம.க.வை சேர்ந்த 141 பேர் மீது வழக்கு
சேலம்
சேலம்
நெய்வேலியில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாவட்ட தலைவர் கதிர்.ராசரத்தினம், வன்னியர் சங்கத்தலைவர் கார்த்தி உள்பட 118 பேர் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டியில் மாவட்ட துணை செயலாளர் லட்சுமணன் உள்பட 13 பேர் மீதும், கரும்பாலை பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ததாக பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பா.ம.க.வை சேர்ந்த 141 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story