விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் விவசாயியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 56). விவசாயி. இவருக்கும், ஓசூர் ரங்கசாமி பிள்ளை தெருவை சேர்ந்த நாராயணன் (58) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று, பிரச்சினைக்குரிய இடத்திற்கு சந்திரசேகரன் சென்றார். அப்போது, நாராயணன் குடும்பத்தினர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் சந்திரசேகரனை அவர்கள் தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில், நாராயணன் அவரது மனைவி ஜானகி மற்றும் உறவினர் ஷோபனா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story