கல்லூரி மாணவர்கள் இடையே தகராறு; 9 பேர் மீது வழக்கு


கல்லூரி மாணவர்கள் இடையே தகராறு; 9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 March 2023 12:15 AM IST (Updated: 7 March 2023 11:25 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த தகராறு தொடர்பாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி அடுத்த வெங்கட்டனூரை சேர்ந்த 21 வயது மாணவர் தர்மபுரியில் உள்ள அரசு கல்லூரியில் எம்.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் வேடியூரை சேர்ந்த அவருடைய நண்பரான கல்லூரி மாணவர் நேற்று மூக்கனூர் வழியாக அரசு டவுன் பஸ்சில் வந்தார். அவருடன் தர்மபுரியில் கல்லுாரியில் படிக்கும் மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர்கள் வந்தனர். மூக்கனூர் பஸ் நிறுத்தத்தில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் டிரைவர் பஸ்சை சாலையில் நிறுத்தினார். இந்த மோதல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தகராறில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானம் செய்தனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story