அவதூறு வீடியோ வெளியிட்டவர் மீது வழக்கு


அவதூறு வீடியோ வெளியிட்டவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 March 2023 6:45 PM GMT (Updated: 9 March 2023 10:25 AM GMT)

வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவர் மீது கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரி

வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவதூறு வீடியோக்கள்

வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்று ஒரு வதந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களில் பரப்பப்பட்டது. இது தொடர்பாக வேறு எந்த மாநிலத்திலோ வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட வீடியோவையும் சிலர் பரப்பினார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மணிஷ் கஷ்யப் என்பவர் இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.

வழக்கு

இதில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தவறான வீடியோவை பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களை கண்காணிக்கும் போலீசார் சார்பில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அந்த வீடியோவை பதிவிட்ட மணிஷ் கஷ்யாப் என்பவரை தேடி வருகிறார்கள்.


Next Story