வியாபாரி மீது தாக்குதல்; 10 பேர் மீது வழக்கு


வியாபாரி மீது தாக்குதல்; 10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் வியாபாரியை தாக்கிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே பழக்கடை நடத்தி வருபவர் ராஜகணேஷ் (வயது27). சம்பவத்தன்று இவரது கடைக்கு, தேர்பேட்டையை சேர்ந்த 10 பேர் வந்து பழங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ராஜகணேஷ் பணம் கொடுத்தால் தான் பழம் கொடுக்க முடியும் என கூறி கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் ராஜகணேசை தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்பேரில், ஓசூர் டவுன் போலீசார் 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story