காவேரிப்பட்டணம் அருகேசொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்துதம்பி மீது வழக்கு
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே பீமனூர் கூடகாருச்சி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 55). விவசாயி. இவருடைய தம்பி திருப்பதி (45). இவர்களுக்குள் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி தேவர்முக்குளத்தில் பழனி தனது நிலம் அருகில் நின்றபோது அங்கு வந்த திருப்பதி அண்ணனுடன் தகராறு செய்தார். அப்போது தகாறு முற்றவே ஆத்திரம் அடைந்த திருப்பதி தான் வைத்திருந்த கத்தியால் பழனியின் வயிறு மற்றும் முகத்தில் தாக்கினார்.
இதில் காயம் அடைந்த பழனி இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் திருப்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story