தர்மபுரி மாவட்டத்தில்புகையிலை பொருட்களை விற்ற 28 பேர் மீது வழக்குப்பதிவு


தர்மபுரி மாவட்டத்தில்புகையிலை பொருட்களை விற்ற 28 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 April 2023 12:30 AM IST (Updated: 29 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தர்மபுரி மாவட்டம் வழியாக வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அவ்வப்போது கடத்தப்படுகிறது. இதை கண்காணித்து தடுக்க தர்மபுரி மாவட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள். இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி, நல்லம்பள்ளி, மதிகோன்பாளையம், அன்னசாகரம், ஒகேனக்கல், அரூர், கடத்தூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் அந்தந்த பகுதி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 29 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story