கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில் கற்களை வீசிய 11 பேர் மீது வழக்கு
கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில் கற்களை வீசிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள சிறுபாலை கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு ஊர்வலமாக வந்தனர். அப்போது ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கல் எறிந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 2 பெண்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து யாதவர் சங்க தலைவர் குமார் இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இளையான்குடி இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார், 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story