குட்கா விற்ற 2 பேர் மீது வழக்கு


குட்கா விற்ற 2 பேர் மீது வழக்கு
x

திருவள்ளூர் அருகே குட்கா விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சேதனையில் ஒரு கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த கடையில் இருந்த 600 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, குட்கா பொருட்களை விற்பனை செய்த மேல்நல்லாத்தூர் அண்ணா தெருவை சேர்ந்த மாடசாமி (வயது 57) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், இளங்கோ ஆகியோர் பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு பெட்டி கடையில் குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து கடையில் சோதனை செய்ததில் 1,100 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா பொருட்களை விற்பனை செய்த கடைக்காரரான பேரம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த ஜான் (32) என்பவர் மீது மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story