மனைவியை தாக்கிய தொழிலாளி உள்பட 3 பேர் மீது வழக்கு


மனைவியை தாக்கிய தொழிலாளி உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 May 2023 1:00 AM IST (Updated: 4 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆதீஸ்வரி. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆதீஸ்வரியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பெரியகுளம் அருகே காந்திநகரில் உள்ள ஆதீஸ்வரி வீட்டுக்கு முகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆதீஸ்வரியை தகாத வார்த்தையால் பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியகுளம் போலீசில் ஆதீஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் முகேஷ் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story