விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 July 2023 8:00 PM GMT (Updated: 29 July 2023 8:01 PM GMT)

போடி அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 45). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், சேகர், ராமுத்தாய். ராமகிருஷ்ணனுக்கும், இவர்கள் 3 பேருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராமகிருஷ்ணனை 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ராஜேந்திரன், சேகர், ராமுத்தாய் ஆகிய 3 பேர் மீதும் குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story