சாலை மறியலில் ஈடுபட்ட 39 பேர் மீது வழக்கு


சாலை மறியலில் ஈடுபட்ட 39 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 39 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அனைத்து பொது சேவை கூட்டமைப்பு சார்பில், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் வாணாபுரம் தாலுகா பிரித்ததை மறுவரையறை செய்யக்கோரி கடையடைப்பு, ஆர்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.

இதில் வடபொன்பரப்பி குறுவட்டத்துக்குட்பட்ட 23 கிராமங்களை சங்கராபுரம் தாலுகாவில் இனணக்ககோரி சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில் அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சேகர் உள்பட 39 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.


Next Story