தனியார் பஸ் டிரைவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
தனியார் பஸ் டிரைவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
பீளமேடு
மோதல் விவகாரத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகராறு
கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர், சரவணம்பட்டி, வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி பஸ் புறப்படுதல் குறித்த டைமிங் பிரச்சினை ஏற்படுகிறது. சில நேரங்களில் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையே இது தொடர்பாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 2 தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினரும் மாறி, மாறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் பீளமேடு பஸ் நிறுத்தத்தில் வைத்து தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பிலும் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு
இந்த புகாரின் பேரில் தனியார் பஸ் ஊழியரான நாதேகவுண்டன் புதூரை சேர்ந்த சிவபிரகாஷ் (வயது 37), பச்சாபாளையத்தை சேர்ந்த கண்டக்டர் விக்னேஷ் (26), மற்றொரு தரப்பில் சிறுமுகை அம்பேத்கர் நகரை சேர்ந்த டிரைவர் ஸ்ரீ மணிகுமார் (24), கண்டக்டர்களான நாச்சிபாளையத்தை சேர்ந்த சிவா (21), ரஞ்சித் (30) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.