தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 600 பேர் மீது வழக்கு


தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 600 பேர் மீது வழக்கு
x

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

பிரதமரின் கிசான் ஓய்வூதிய திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு முன் அனுமதி பெறாததால் அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மாநில பொதுச் செயலாளர் தினேஷ் உள்பட விவசாயிகள் 100 பேர் மீது திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதேபோல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நடந்த என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து தடையை மீறி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 500 பேர் மீது காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story