ஆபாச நடன நிகழ்ச்சி தொடர்பாக 8 பேர் மீது வழக்கு


ஆபாச நடன நிகழ்ச்சி தொடர்பாக 8 பேர் மீது வழக்கு
x

ஆபாச நடன நிகழ்ச்சி தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பழைய கோட்டை மேத்தக்கான்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 25-ந் தேதி நடந்தது. இதையொட்டி, அன்று இரவு உயர் நீதிமன்ற அனுமதி பெற்று ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆனால், மேடையில் ஆடிய கலைக்குழுவினர் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், மிகவும் மோசமாக அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் ஆடினர். இதனால் மக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் நடந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், நடனமாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகரன் தலைமையிலான நிர்வாகிகள், மணப்பாறை போலீஸ் துணை சுப்பிரண்டு ராமநாதனை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதன் பேரில் பொன்னர், மகா, ராம்யா, கார்த்திக், பிரபாகரன் உள்ளிட்ட ஆபாசமாக நடனமாடிய நடன கலைஞர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story