இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு


இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு
x

திண்டிவனம் அருகே இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த சேந்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி ஏகவள்ளி(வயது 50). இவர் தனது கணவருக்கு சொந்தமான வீட்டுமனையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் அடித்தளம் அமைத்து சுவர் எழுப்பி உள்ளார்.

இதன் முன்விரோதம் காரணமாக அக்கம்பக்கத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டில் இருந்த ஏகவள்ளியை வெளியே இழுத்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த மல்லிகா(50), தேவராஜ், விஜயகுமார், முருகன், செல்வராஜ், தரணி ஆகிய 6 பேர் மீதும், இதேபோல் மாட்டு கொட்டகை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகவள்ளி, சந்திரசேகரன் ஆகியோர் தன்னை தாக்கியதாக மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் சந்திரசேகரன், ஏக வள்ளி ஆகியோர் மீதும் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story