அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை


அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு:  சென்னை ஐகோர்ட்டில்  இன்று விசாரணை
x
தினத்தந்தி 22 March 2023 7:56 AM IST (Updated: 22 March 2023 8:17 AM IST)
t-max-icont-min-icon

மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர் .

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகள், சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக, உரிய பதிலளிக்கும் படி எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், அன்றைய தினம் மாலையே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச்26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர் . இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட்டு , அனைத்து வழக்குகளையும் சேர்த்து மார்ச் 22-ம் தேதி விசாரிப்பதாகத் தெரிவித்தது. அதுவரை பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story