ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு


ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் பி.விஜயகுமாரி மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் பணப்பட்டுவாடா மற்றும் விதிமீறல் பரப்புரை குறித்து புகாரளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story