போலி விசா கொடுத்தவர்கள் மீது வழக்கு


போலி விசா கொடுத்தவர்கள் மீது வழக்கு
x

புருனே நாட்டுக்கு அனுப்புவதாக கூறி போலி விசா கொடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை

இளையான்குடியை அடுத்த கலங்காதன்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). கடந்த ஜூன் மாதம் வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை பார்த்த கண்ணன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சிவகங்கையில் உள்ள முகவரியில் சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்தவர்கள் புருனே நாட்டிற்கு வேலைக்கு ஆள் எடுக்க உள்ளதாகவும் விருப்பம் இருந்தால் சதீஷ் என்பவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி அவரது செல்போன் நம்பரை கொடுத்தனர். அப்போது அவர் ரூ.40 ஆயிரம் அனுப்ப சொல்லி உள்ளார். அதன்படி அவர் பணம் அனுப்பி உள்ளார்.

அதன் பின்பு அவர் கொடுத்த விசா போலியானது என்று தெரிந்தது இதைத்தொடர்ந்து கண்ணன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சுந்தர மகாலிங்கம் விசாரணை நடத்தி சதீஷ், சிவன், முருகராஜ், கிருஷ்ணன், பூபதி, பவதாரணி, மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் இதே போல் மேலும் பலரிடம் புருனே நாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணம் வசூல் செய்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story