லாட்டரி சீட்டு விற்றவர் மீது வழக்கு


லாட்டரி சீட்டு விற்றவர் மீது வழக்கு
x

கள்ளக்குறிச்சியில் லாட்டரி சீட்டு விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருணாபுரம் மாரியம்மன் கோவில் அருகில் நின்று ஒருவர், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் லாட்டரி சீட்டு விற்றவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தப்பி ஓடியது சின்னசேலம் காந்தி நகரை சேர்ந்த மணிவாசகம் (வயது 53) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவாசகத்தை தேடி வருகின்றனர்.


Next Story