அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: விசாரணையை தீவிரப்படுத்தும் குற்றப்பிரிவு போலீசார்


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: விசாரணையை தீவிரப்படுத்தும்  குற்றப்பிரிவு போலீசார்
x

போக்குவரத்து துறையில் 2014 முதல் 2015 வரை பணியமர்த்தப்பட்ட சுமார் 1500 பேரிடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அவர் உள்ளார்

மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவுப்படுத்தி உள்ளனர். போக்குவரத்து துறையில் 2014 முதல் 2015 வரை பணியமர்த்தப்பட்ட சுமார் 1500 பேரிடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக 300 போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பணியமர்த்தப்பட்டது எப்படி? சமர்ப்பித்த ஆவணங்கள் என்ன? என விசாரித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்


Next Story