முதல்-அமைச்சர் படத்தை அவமதித்தவர் மீது வழக்கு
முதல்-அமைச்சர் படத்தை அவமதித்தவர் மீது வழக்கு
கோயம்புத்தூர்
கோட்டூர்
கோட்டூர் அருகே ரமணமுதலிபுதூரில் கலைஞர் அரங்கம் உள்ளது. இங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படமும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படமும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் புகைப்படங்களின் மீது ஒருவர் கற்களை வீசி அவமதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் தி.மு.க. செயலாளர் ஆனந்தகுமார் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்தகுமார் (வயது 28) என்பவர் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் படங்களை அவமதித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story