தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலை எதிர்த்து வழக்கு


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலை எதிர்த்து வழக்கு
x

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை.

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர், துணைத்தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு வருகிற மார்ச் 26-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த அறிவிப்பை ரத்துசெய்து, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், கவுன்சில் உறுப்பினர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல், 'இந்த தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக யாரை நியமிப்பது?' என்பது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிப்பதாக கூறியுள்ளது' என்றார். இதையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story