பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு


பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு
x

பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

திருச்சி குமரன் நகர் பகுதியை சேர்ந்த 31 வயது பெண் அவரது கணவனை பிரித்து அவரது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணிற்கும், அவரது பள்ளி நண்பர் ரகுநாதன் (31) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ரகுநாதன், பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார். தொடர்ந்து ரகுநாதனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. மேலும் ரகுநாதன் வீட்டிற்கு சென்று அந்த பெண் கேட்டுள்ளார். அப்போது ரகுநாதனின் பெற்றோர் அவரை தகாத வார்த்தையால் திட்டி கர்ப்பத்தை கலைக்க கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story