14 வயது சிறுவனை பணியில் அமர்த்திய பேக்கரி உரிமையாளர் மீது வழக்கு
14 வயது சிறுவனை பணியில் அமர்த்திய பேக்கரி உரிமையாளர் மீது வழக்கு
கோயம்புத்தூர்
கணபதி
கோவை கணபதி பகுதியில் ஒரு பேக்கரியில் குழந்தை தொழிலாளர் பணிபுரிவதாக தேசிய குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு பிரிவு அலுவலர் விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு 14 வயதுள்ள ஒரு சிறுவன் பணியில் இருந்தது உறுதியானது. உடனடியாக இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அந்த பேக்கரி உரிமையாளரான கிருஷ்ணன் (வயது 54) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் பணியில் இருந்த சிறுவன் மீட்கப்பட்டார்.
Related Tags :
Next Story